Tuesday, May 30, 2023
Google search engine
HomeGulf NewsMarburg virus outbreak: தான்சானியா, கினியாவுக்குச் செல்ல வேண்டாம் என்று குடிமக்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ்...

Marburg virus outbreak: தான்சானியா, கினியாவுக்குச் செல்ல வேண்டாம் என்று குடிமக்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவுறுத்தல்

சமீபகாலமாக மார்பர்க் வைரஸ் (Marburg virus) பரவி வருவதால், தான்சானியா (Tanzania) மற்றும் கினியா (Guinea) நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அமீரக மக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் அறிவுறுத்தியுள்ளது.

அமீரக குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் (Ministry of Foreign Affairs and International Cooperation) இந்த இடங்களுக்கான அனைத்து பயணத் திட்டங்களையும் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்க பரிந்துரைத்துள்ளது.

சனிக்கிழமையன்று அமைச்சகம் வெளியிட்ட இந்த அறிக்கையில், தற்போது தான்சானியா, கினியாவில் இருக்கும் எமிராட்டிகளை எச்சரிக்கையுடன் செயல்படவும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் படியும் வலியுறுத்தியுள்ளது.

அவசரநிலை ஏற்பட்டால், 0097180024 என்ற ஹாட்லைன் எண் மூலம் அமைச்சகத்தை தொடர்பு கொள்ளுமாறு எமிராட்டிஸ் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மார்பர்க் வைரஸ் நோய் என்பது ஒரு அரிதான ஆனால் கொடிய வைரஸ் நோயாகும், இது பழ வெளவால்களிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. மற்றும் இரத்தம், வாந்தி அல்லது உமிழ்நீர் போன்ற உடல் திரவங்களுடன் நேரடி தொடர்பு மூலம் பரவுகிறது.

வைரஸ் பரவுவதைத் தடுக்கவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சகத்தின் இந்த அறிக்கை அமைந்துள்ளது.

மேலும் சவூதிஅரபிய அரசாங்கமும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்புடுத்தும் பொருட்டு இந்த அறிவித்தலை வழங்கியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments