12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் விலை குறைக்கப்படவுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை 3,738 ரூபாவாகும்.
அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 402 ரூபாவால் குறைக்கப்படுகிறது.
இதன்படி அதன் புதிய விலை 1,502 ரூபா என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதுதவிர 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 183 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது